உத்தர பிரதேசத்தில் வாராணசியைச் சேர்ந்த ஷியாம் சவுராசிய என்ற விஞ்ஞானி புதிய தனிப்பட்ட பாதுகாப்பு ‘லிப்ஸ்டிக் துப்பாக்கியை’ உருவாக்கியுள்ளார். அது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்போது இந்த Lipstick Gun-ல் உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும்போது, ஒரு வெடிபொருள் வெடிப்பதை போல பெரும் சத்தம் ஏற்படுவதோடு, அவசர எண் 112-க்கு எமர்ஜென்சி (உத்தரபிரதேச அவசர காவல் எண்) தகவல் சென்றுவிடும் என தெரிவித்தார். இந்த பாதுகாப்பு சாதனம் பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை போலவே உள்ளதால், அவர்களை யாராவது தாக்குவதற்கோ அல்லது பாலியல் தொல்லையில் ஈடுபடுவதற்கோ வருபவர்களுக்கு எந்தவித சந்தேகம் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, இளம்பெண்கள் மத்தியிலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்கள், மத்தியிலும் பெரும் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல், இதனை தடுக்கும் வகையில் இந்த புதிய கண்டுப்பிடிப்பு இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக பெண்களிடையே பெறும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கேஜெட்டைப் பயன்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவி ஷெபாலி ராய் எடுத்து செல்வது வசதியாகவும், இதனுடைய சத்தம் பயத்தை உருவாக்குகிறது. நீங்கள் அதை வெளியே எடுக்கும்போது உதட்டுச்சாயம் போல் இருப்பதால் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஷியாம் சவுராசிய சாதாரண லிப்ஸ்டிக்கில் கூடுதலாக சாக்கெட் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்து கொள்ளலாம் எனவும், பின்னர் புளூ டூத் மூலம் மொபைலுடன் இணைத்துக் கொள்ளலாம். இது சுமார் ரூ.600 செலவாகும் கேஜெட்டை தயாரிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது என்றும், இந்த ‘லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமையை பெறவும் திட்டமிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…