காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை..!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு -காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் மஞ்சோவா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது, மஞ்சோவா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 மற்றும் ஒரு துப்பாக்கியையும் பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
#BudgamEncounterUpdate: 01 unidentified #terrorist killed. One AK 47 rifle & one pistol recovered. #Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/pZicvK5zfH
— Kashmir Zone Police (@KashmirPolice) August 6, 2021