மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு -மன்மோகன் சிங்
மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என மத்திய திட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலை அளிக்கும் நிலையில் உள்ளது.மத்திய அரசின் தவறான மேலாண்மையால், நாட்டின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5% ஆக குறைந்துள்ளது .500, 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த முட்டாள்தனமான நடவடிக்கை ஆகும்.ஜி.எஸ்.டி வரியைச் சரியாக திட்டமிடாமல் செயல் படுத்தியதுதான் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் ஆகும் .
மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.