மேற்கு வங்கத்தில் ஜூன் மாதத்தில் காணப்பட்ட வேலையின்மை விகிதம், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் குறைவு என மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலா் வேலையிழந்தனா். இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்புக்கு ஏற்றாற்போல பல வகையான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் வேலையின்மை குறைந்து வருகிறது.
சமீபத்தில், கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் காணப்பட்ட வேலையின்மை விகிதம் தொடா்பான அறிக்கையை வெளியானது. அதில், நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 11 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 23.5 சதவீதம் இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த ஜூன் மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் வேலையின்மை விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இது ஒட்டுமொத்த நாட்டில் காணப்பட்ட வேலையின்மை விகிதத்தை விட குறைவு என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…