தொழில்முனைவோருக்கான முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், 12 கோடி பேர் பயன்பெற்றிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிறு, குறு தொழில்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்கும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம், கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தினால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் கலந்துரையாடினார். தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முத்ரா திட்டம் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
முத்ரா திட்டத்தினால் பயனடைந்துள்ள 12 கோடி பேரில் 28 சதவீதம்பேர், முதல்முறை தொழில்முனைவோர் என்று அவர் தெரிவித்தார். பயன்பெற்றவர்களில் 74 சதவீதம் பேர், அதாவது 9 கோடி பேர் பெண்கள் என்றும் மோடி கூறினார். எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 55 சதவீதம் பேர் முத்ரா திட்டத்தால் பயன்பெற்றிருப்பதாகவும் பிரதமர் மோடி புள்ளிவிவரம் அளித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…