பாஜக ஆட்சியில் காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் ஊழலின் கூடமாக மாறிவிட்டது – அகிலேஷ் யாதவ்!

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியான பாஜகவை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் ஊழலின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக அரசின் சகிப்புத்தன்மை இல்லாத இந்தக் கொள்கைகள் வெறும் போலித்தனமானது எனவும், அதிகார பாதுகாப்பின் கீழ் நிர்வாகம் ஏழைகள் மற்றும் அப்பாவிகளை ஓடுகிறது எனவும், புல்டோசர்கள் விவசாயிகளின் மீது தான் இயக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞர்கள் பலர் வேலையில்லா திட்டத்தினால் உயிர்களை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, ஆனால் பாஜக அரசு உணர்ச்சியற்றதாயிருக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.