ஐ.நா பாதுகாப்பு அவைக்கு இந்தியா 8-வது முறையாக தேர்வு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு இந்தியா எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா,இங்கிலாந்து,சீனா,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்தர உறுப்பினராக உள்ளது.நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக சுமார் 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இந்தியா ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு போட்டியிட முடிவு செய்தது.
ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக போட்டியிடவில்லை.இதற்கான தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற்ற நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தது. இதனால் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக தேர்வாகியுள்ளது.இந்தியாவை தவிர மெக்ஸிகோ,அயர்லாந்து,நார்வே ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.