காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.இதில் ,பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் தெரிவித்தது.மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது பாகிஸ்தான்.
இதன் பின்னர் பாகிஸ்தான் மற்றும் சீனா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. இதனை ஏற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …