பலிக்காமல் போன பாகிஸ்தான் கனவு ஐநாவில் சீனா ,ரஷ்யாவின் கருத்துக்கள் இதோ
ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு சென்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் அரசு தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இதை எடுக்கப்பட்ட முடிவுகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது .அதன்படி, பாகிஸ்தான் இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்தி கொள்ள போவதாகவும் தெரிவித்தது.மேலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர் பாகிஸ்தான் மற்றும் சீனா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது.இரு நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் அனுப்பியது. இதனை ஏற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில்,நியூ யார்க்கில் இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று அறிவித்தது.
அதன்படி நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாத தலைவரான போலந்தின் ஜோன்னா ரொனெக்கா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை .சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதவாக பேசியுள்ளது.
We are friends and good partners with both #India and #Pakistan and both peoples. We have no hidden agendas. So we will open-heartedly continue to engage with Islamabad and New Delhi in order to help both of them come to terms and have good neighbourly relations #Kashmir
— Dmitry Polyanskiy (@Dpol_un) August 16, 2019
இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் ரஷ்யாவின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான ரஷ்ய உறுப்பினர் டிமிட்ரி போலியான்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிடவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட அஜெண்டா எதுவும் வைத்துக்கொள்ளவில்லை.இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி என இருதரப்பினரிடமும் நாங்கள் நட்பு பாராட்டி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானால் காஷ்மீரில் எந்த பதற்றமும் நிலவக்கூடாது என்று சீனா தரப்பில் தெரிவித்துக்கொள்கிறோம் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவிற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் சையத் அக்பருதீன் கூறுகையில்,இந்த பிரச்சினை இரு தரப்பு ரீதியாக தீர்க்க வேண்டும்.இந்த உலகை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த நினைக்கிறது.பயங்கரவாதத்தை நிறுத்தி விட்டு, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.நாம் சிம்லா ஒப்பந்தத்திற்கு கடமைப்பட்டுள்ளோம்.இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்க பாகிஸ்தான் தவறிவிட்டது.ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும். நல்லாட்சியை உறுதி செய்யும் நோக்கில் தான் சட்டப்பிரிவு 370- வது பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நிலைப்பாடு ஆகும். மேலும் இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.