ஐ.நா பொதுச்சபையில் காணொளி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
உட்ரோவில்சன் காலத்திலிருந்து ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஐ.நா பொதுக் கூட்டத்தின் இன்றைய நிகழ்ச்சிப்படி, இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது. பின், அடுத்த இரண்டு வாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என்றும், ஏற்கனவே கடந்த செப்டெம்பர் 22-ம் தேதி தொடங்கிய பொது விவாதம் செப்டெம்பர் 29 வரை நடைபெறும் என்றும், பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பேசும் முதல் உலகத் தலைவராக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…