குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் ! உச்சநீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு
குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்குகளுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான விவரங்களில் மட்டும் தான் நாங்கள் தலையிடப்போகிம் .குறிப்பாக உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தலையிடப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.