கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. இதன் காரணமாக பள்ளி பொதுத்தேர்வும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடத்த முடியாமல் தள்ளிப்போனது.
இதையடுத்து, பள்ளி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யும்படி, கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சில மாநிலங்களில் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வில் கட்டாயம் என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு சில நாள்களுக்கு முன் வந்தபோது யுஜிசி எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…