யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, வருகின்ற 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கல்லுரி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவி தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தேர்வில் யு.ஜி.சி. நெட் தேர்வு பெற்றிருப்பது கட்டாயம். இந்த தேர்வை என்.டி.ஏ. (National Testing Agency) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என இரு முறை நடத்தப்படும். இந்த தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தப்படும். தேர்வில் இரண்டு தாள்கள் இடப்பெற்றிருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் கொள்குறி தேர்வு முறைகள் கேள்வி கேட்கப்படும். முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும் இடப்பெற்றிருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி நாளான இருந்த நிலையில், தற்போது மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.சி.ஏ.ஆர். மற்றும் சி.எஸ்.ஆர். நெட் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைழக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் வருகின்ற 31 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.