மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே ?
சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பு ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இன்று மும்பையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி-சிவசேனா கட்சித் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறுகையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து பிரச்சனை எதுவும் இல்லை என்றும் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி-சிவசேனா நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.