நாளை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

Published by
Venu

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இன்று இடைக்கால சபாநாயகர் முன்னிலையில்  எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே நிறுத்த முடிவு செய்துள்ளது.இதன்படி உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். நாளை மாலை 6.40 மணியளவில், சிவாஜி பார்க்கில் வைத்து நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.

Published by
Venu

Recent Posts

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

48 minutes ago

விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…

1 hour ago

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

2 hours ago

CSK vs DC : பந்துவீச்சில் கட்டுப்படுத்திய சென்னை., நிலைத்து ஆடிய டெல்லி! 184 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…

3 hours ago

CSK vs DC : விசில் போடு மச்சி.., சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த 2 முக்கிய அப்டேட் இதோ…

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…

4 hours ago

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…

6 hours ago