மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முதலமைச்சர்கள் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடிக்கும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.தொலைபேசி மூலமாக பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…