உதய்பூர் படுகொலை – தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

Default Image

உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி  வருகிறார்.இவர், பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, சமூகவலைதளத்தில் அந்த கடைக்காரரின் எட்டு வயது மகன் ஒரு  பதிவிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த சில மர்மநபர்கள், அவருடைய கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி அவரின் தலையை துண்டித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், உதய்பூர் படுகொலை காரணமாக, ராஜஸ்தானில் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரத்துக்கு இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்