98.2% மதிப்பெண் பெற்ற விவசாயி மகனுக்கு யு.எஸ் கார்னல் உதவித்தொகை!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 98.2 சதவீதம் மதிப்பெண் பெற்றதால் ஐவி லீக் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது கொண்ட விவசாயி ஒருவரின் மகன் வெளியாகிய 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் 98.2 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எனவே இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஐவி.லீக் பல்கலைக்கழகத்தின் முழு உதவித்தொகை பெற கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார்.
இவர் கணிதத்தில் 95, ஆங்கிலத்தில் 97, அரசியல் அறிவியலில் 99, வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் முழு மதிப்பெண்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரை வாழ்த்தி அமெரிக்க பல்கலைக்கழகம் உதவித்தொகையை மேல் படிப்புக்காக வழங்கவுள்ளது.