உ. பியின் பள்ளி பால்கனி சுவர் திடீரென சரிந்து விபத்து – 40 குழந்தைகள் படுகாயம்?
உத்தரப் பிரதேசம் : பாராபங்கி மாவட்டத்தில்பள்ளியின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவை ஒட்டியுள்ள பாரபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தின் வராண்டாவின் தளம் சரிந்து விழுந்ததில் எட்டு முதல் 15 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை தொடர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் போலிஸுக்கு தகவல் தெரிவிக்க, உடனே விரைந்த காவலர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு, இடிந்து விழுந்த பால்கனியின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மாணவர்கள் வெளியே மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பாரபங்கி மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், விபத்து நடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஜஹாங்கீராபாத் மருத்துவ மனையில் காயமடைந்த 25 மாணவர்கள் குழந்தைகள் முகம், கழுத்து, கை, கால்களில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அங்கு மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், முதல் மாடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டு, அதன் தளத்தின் ஒரு பகுதியை மீட்டு வருவதாகவும் அவர் கூறினார். சுவர் சரிந்து விபத்துக்குள்ளானது காரணம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.