தொற்றுநோயின் இரண்டாவது அலை புதிய சவால்களைக் கொண்டுவந்துள்ளது யோகி ஆதித்யநாத்- பிரதமர் மோடிக்க நன்றி
லக்னோ மாநிலத்தில் 300 ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தனது அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (மே 10) தெரிவித்தார்
மேலும் கோவிட்-19 தொற்றுநோயின் 2-வது அலையைச் சமாளிக்க ரயில்வே மற்றும் விமானப்படை உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சப்ளை செய்ய முடிந்தது என்றும் இதற்காக மோடி அரசுக்கு நன்றி எனவும் அவர் கூறினார். இதன்மூலம் நாங்கள் 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மாநிலம் முழுவதும் வழங்கினோம், மேலும் மாநிலத்தில் புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளோம். முதல் கட்டத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் செறிவூட்டிகளும் வழங்கப்படும், ”என்றார்.
முன்னதாக ஆதித்யநாத் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறியிருந்தார், மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக பொய்யாக புகார் கூறும் தனிநபர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ மே 17 அன்று காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…