சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்ற இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர்.
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கினர்.இதனால் பெண் செய்தி வாசிப்பாளர் கவிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.
பின்னர் சபரிமலையை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டது.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்ற இரு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…