ஊரடங்கை மீறியதால் இரு சக்கர வாகனம் பறிமுதல்.! இளைஞர் தீக்குளிப்பு.!

தனது இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் கேரளா, மூணாறு அருகேயுள்ள சூரியநெல்லி எனும் ஊரை சேர்ந்த விஜய பிரகாஷ் என்கிற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.
கொரோனா முன்னெச்செரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகள் இன்றி வேறு யாரும் சரியான காரணம் இன்றி வீதியில் சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள சூரியநெல்லி எனும் ஊரில் விஜய பிரகாஷ் என்கிற 24 வயது இளைஞர் அப்பகுதி வீதியில் அவரது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனை கண்டு சாந்தம்பாறை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால், அத்தனையும் மீறி, மீண்டும் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்ததால் அந்த இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த அந்த இளைஞர் தனது உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட தனது வாகனத்தை தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.
பின்னர், அந்த இளைஞரின் உடலில் தீ பற்றிக்கொண்டது. தீ காயங்களுடன் மெயின் ரோட்டில் அலைந்து திரிந்த அந்த இளைஞர் உடலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க பொதுமக்கள் முற்பட்டனர். பின்னர் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அந்த இளைஞர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி விஜய் பிரகாஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025