இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவின் சம்பூரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.