டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது; வலதுசாரி தலைவர்களை கொல்ல முயற்சி
டெல்லியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. அவர்கள் வரும் மாதங்களில் வலதுசாரி தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறுப்பினர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜக்ஜித் சிங் மற்றும் நௌஷாத் ஆகியோர் பயங்கரவாத அமைப்பில் “தங்கள் திறனை நிரூபிக்க” ஒருவரை கொன்றதாகவும் அந்த நபரின் தலையை துண்டித்து, அந்தச் செயலின் வீடியோவை பாகிஸ்தானில் உள்ள ஒருவருக்கு அனுப்பியதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சிறப்புப் பிரிவு சனிக்கிழமையன்று பல்ஸ்வா பால் பண்ணை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து ஒரு சிதைந்த உடலை மீட்டுள்ளது.