#JustNow: உச்ச நீதிமன்றம் நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர்.
நீதிபதிகள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி துலியா மற்றும் பர்திவாலா ஆகியோரின் நியமனம் மூலம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்ற பிறகு 32 ஆக குறைந்திருந்த நிலையில், இன்று மேலும் 2 பேர் பதவியேற்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025