பஞ்சாப் கனமழையில் நொடியில் தரைமட்டமான இரண்டுமாடி வீடு; வெளியான வீடியோ.!

Punjab2storeyhouse

பஞ்சாபில் கனமழையால் இரண்டு மாடி வீடு ஒன்று இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பீதியை உண்டாக்கியுள்ளது.

பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாளாக மிக கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்கள் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையமும் தகவல் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, இரண்டு மாடி வீடு ஒன்று சில நொடிகளில் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடு கராரில் உள்ள பஞ்சவதி என்கிளேவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நொடிப்பொழுதில் இடிந்து விழும் இந்த வீட்டின் வீடியோ காட்சிகள் அனைவரையும் பீதியில் உள்ளாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்