கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க இரண்டு திட்டங்கள்.! தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர்.!
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக இரண்டு திட்டங்களை ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவதை நோக்கமாக கொண்டு திங்கட்கிழமை அன்று இரண்டு ஊட்டச்சத்து திட்டங்களை தொடங்கியுள்ளார். ‘YSR சம்பூர்ணா போஷனா மற்றும் YSR சம்பூர்ணா போஷனா பிளஸ் என்ற இரண்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர், ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள பிரிவினர்களுக்கு இந்த திட்டம் மூலம் சத்தான உணவு வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 30.16 லட்சம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 52.9% கர்ப்பிணி பெண்கள் கடுமையான ரத்தச்சோகையாலும், 31.9% குழந்தைகள் குறைந்த பிறப்பு எடை கொண்டவர்களாகவும், 31.4% குழந்தைகள் குன்றிய வளர்ச்சியாலும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே வருங்கால சந்ததியினரை ஆரோக்கியமாக மாற்றவும், ஊட்டச்சத்து குறைபாடு இறப்புகளை குறைக்கவும் அரசு இந்த இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார். இதனை 8320 அங்கன்வாடி மையங்களை உள்ளடக்கிய 77 பழங்குடியினர் பகுதிகளில் சத்தான உணவை வழங்க YSR சம்பூர்ணா போஷனா பிளஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முயற்சியால் மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 1863 கோடி செலவிடுவதாகவும், அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு ரூ. 1100 செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் YSR சம்பூர்ணா போஷனா ஆப், பாக்கெட் புக் மற்றும் SOP புக்லெட்களையும் வெளியிட்டுள்ளார்.