ஆலப்புழாவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் வெட்டி கொலை..!
ஆலப்புழா சில மணி நேரங்களிலேயே இரண்டு தலைவர்கள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் கே.எஸ் ஷான் ஒரு கும்பலால் ஷேன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கே.எஸ் ஷான் உடல் முழுவதும் 40 வெட்டுக் காயங்களுடன் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷேன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவில் கே.எஸ் ஷான் உயிரிழந்தார். ஷானின் மரணச் செய்தி வெளியான சில மணி நேரங்களில் இரண்டாவது கொலை ஆலப்புழாவில் நடந்துள்ளது.
பா.ஜ.க தலைவர் மற்றும் ஓ.பி.சி. மோர்ச்சா மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் கொல்லப்பட்டார். ரஞ்சித் தனது வீட்டுக்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றதுள்ளது. காலை நடைப்பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது, மர்மநபர்கள் கதவைத் தட்டி, கதவைத் திறந்ததும் ரஞ்சித் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதில் ரஞ்சித்தின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட ரஞ்சித் ஆலப்புழா பாரில் ஒரு முக்கிய வழக்கறிஞரும் ஆவார். ஷானின் கொலைக்குப் பின்னால் பாஜக-ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்கள் இருப்பதாக SDPI குற்றம் சாட்டுகிறது. ரஞ்சித் கொலைக்கு பின்னணியில் SDPI என்றும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே ஷேன் மீது மோதிய காரின் எண் போலியானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கே.எஸ் ஷான் மீது மோதி காரில் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த சில சிசிடிவி காட்சிகளை பொலிசார் கைப்பற்றினர். அதை வைத்து நடத்திய விசாரணையில் அந்த வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது.