நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.! டெல்லியில் இருவர் அதிரடி கைது… அடுத்தகட்ட விசாரணை தீவிரம்…
டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது மருத்துவம் பயில நீட் பொதுநுழைவு தேர்வு கட்டாயம். அதில் ஆள்மாறட்டம் நடைபெறும் செய்திகளும் ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இறுதி வெளியாகும் நிலையும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக கூறி டெல்லி காவல்துறையினர் இருவரை கைது செய்து உள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவம் பயிலும் மாணவர்கள். அதில் ஒருவர் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடக்க கால விசாரணை எனவும், இருவரிடம் விசாரணை நடத்தி அதன் மூலம் நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யப்படுவர் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.