இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு.!
- நேற்று காஷ்மீர் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்த விதியை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
- இன்று காலை முதல் இந்திய பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியா ,பாகிஸ்தானுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளது.ஆனால் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்த விதிகளை மீறி நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் இன்று காலை முதல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (ஐ.எஸ்.பி.ஆர்) ட்விட்டர் பக்கத்தில் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலால் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தாக கூறியுள்ளார்.