ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் ஜூன் 27 இல் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் நுழைந்த ட்ரோன்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு, சம்பா மற்றும் கத்துவா மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு 7.10 மணி முதல் இரவு 8.45 மணி வரை குறைந்தது நான்கு ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் மீது துப்பாக்கிச்சூடு :
சம்பா மாவட்டத்தில் நந்த்பூரில் இந்திய ராணுவத்தின் 92 படைப்பிரிவு தலைமையகங்களுக்கு அருகிலும், ராம்கர் காவல் நிலையம் அருகில், மற்றொரு ட்ரோனை கத்துவா மாவட்டத்தின் ஹிரானகர் பகுதியில் உள்ளூர்வாசிகள் கண்டு எச்சரிக்கை எழுப்பினர், ஆனால் ட்ரோன் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை கூட, ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் உள்ள பல்லன்வல்லா செக்டரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (கட்டுப்பாட்டு) ஒரு ட்ரோன் இரவு 9 மணியளவில் காணப்பட்டது.
ட்ரோனைக் கண்டறிந்த இராணுவ வீரர்கள் பறக்கும் பொருளின் மீது சுட்டுள்ளார். பின்னர் ட்ரோன் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய பின்னர் எல்லையின் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.
ட்ரோன்கள் மூலம் தாக்குதல்:
ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் கடந்த ஜூன் 27 அதிகாலை வெடிப்பொருட்கள் நிரப்பிய ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். இந்தியாவில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்பதால், இதை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களிலும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பறக்கும் பொருள் ( சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் ) ஆர்னியாவிலிருந்து வந்து ஜம்மு நோக்கி நகர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து எட்டு முதல் ஒன்பது கி.மீ தூரத்தில் நந்த்பூர் உள்ளது.
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…