சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை மீறி நிற்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தென்கிழக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தினால் கரக்பூர் – பாங்குரா – ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலை தடம் மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை மீறி நிற்காமல் சென்றதால் மற்றொரு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தினால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென்கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த…
சென்னை : மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் பெரும்…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…