இரண்டு சரக்கு ரயில் மோதி விபத்து.! தென்கிழக்கு ரயில்வே விளக்கம்..!

Twogoodstrainscollided

சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை மீறி நிற்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தென்கிழக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தினால் கரக்பூர் – பாங்குரா – ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலை தடம் மாற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை மீறி நிற்காமல் சென்றதால் மற்றொரு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தினால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென்கிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்