#BREAKING : ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி -சோதனைக்கு ஒப்புதல்..!
ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா..? அல்லது வேண்டாமா..? என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை தான் 2-வது தவணையிலும் செலுத்தி கொள்ளும் நடைமுறை உள்ளது.
இந்நிலையில், ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை அதாவது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா..? என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.