மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு அறிவிப்பு.!

இந்தியாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தளர்வுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் அந்த மாநிலங்கள் முழு ஊரடங்கு பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதன்படி, இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் என்றும் போக்குவரத்து சேவை முடக்கப்படும் என கூறினார்.
இந்த வாரம் முழு ஊரடங்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை நடைமுறையில் இருக்கும் எனவும் அடுத்த வாரம், புதன்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025