டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட இரண்டு சகோதரர்கள்!
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட இரண்டு சகோதரர்கள்.
டெல்லியில் ஆர்பிட் மற்றும் அங்கிட் என்ற இரு நகைக்கடை சகோதரர்கள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் ஆர்பிட் திருமணமாகாதவர். அங்கித் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டின் மூன்றாவது மாடியில் தற்கொலை செய்து கொண்டபோது, அவர்களது தந்தை முதல் தளத்தில் இருந்துள்ளார். இவர்களிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தங்களது தற்கொலைக்கு காரணமாக யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால், மோசமான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.