பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்களை மீட்ட காவல்துறையினர்.
பதினொன்றாம் வகுப்பு படிக்க கூடிய மாணவன் ஒருவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியும் கடந்த மார்ச் மாதம் நாகலாந்து மாநிலத்தில் திம்மாபூர் எனும் மாவட்டத்தில் இருந்து தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தஞ்சமடைந்த இவர்கள் வடமாநில தொழிலாளர்களை பார்த்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் ஏதேனும் தொழில் செய்யலாம் என திட்டத்துடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நாகலாந்தில் சிறுவர்களின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களின் செல்போன் டவரை வைத்து தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு நாகலாந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறுவர்களின் செல்போன் உதவியுடன் இரண்டு சிறுவர்களையும் குழந்தைகள் நல குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவர்கள் இருவரையும் தனித்தனியாக அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் நாகலந்திலிருந்து வந்த குழந்தைகளை குடும்ப நல குழுமத்தினர் மற்றும் போலீசார் விமானம் மூலம் சிறுவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…