பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்கள்!

Default Image

பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்களை மீட்ட காவல்துறையினர்.

பதினொன்றாம் வகுப்பு படிக்க கூடிய மாணவன் ஒருவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியும் கடந்த மார்ச் மாதம் நாகலாந்து மாநிலத்தில் திம்மாபூர் எனும் மாவட்டத்தில் இருந்து தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தஞ்சமடைந்த இவர்கள் வடமாநில தொழிலாளர்களை பார்த்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் ஏதேனும் தொழில் செய்யலாம் என திட்டத்துடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நாகலாந்தில் சிறுவர்களின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களின் செல்போன் டவரை வைத்து  தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு நாகலாந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறுவர்களின் செல்போன் உதவியுடன் இரண்டு சிறுவர்களையும் குழந்தைகள் நல குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவர்கள் இருவரையும் தனித்தனியாக அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் நாகலந்திலிருந்து வந்த குழந்தைகளை குடும்ப நல குழுமத்தினர் மற்றும் போலீசார் விமானம் மூலம் சிறுவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்