ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் இரு சிறுவர்கள் கைது!

ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி என்றால் உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 உயர் ஜாதி ஆண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தான்.
இது, நாட்டையே உலுக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் நிலை அடங்குவதற்குள் உத்திரப்பிரதேசத்தில் அடுத்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு நடந்துள்ளது. அதாவது ஹத்ராஸ் மாநிலத்தில் 4 வயது கொண்ட சிறுமி ஒருவரை வெறும் 9 மற்றும் 12 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறுவர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களை காவலில் எடுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஹத்ராஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025