திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு படையினருக்கு பலத்த காயமடைந்துள்ள காரணத்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சண்டை காலை 6.30 மணியளவில் நடைபெற்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளில் சிலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கும், மேலும் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…