ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.40 மணியளவில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் நள்ளிரவு 1.40 மணியளவில் 5 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. முதல் குண்டுவெடிப்பு விமான நிலைய தொழில்நுட்ப பகுதியின் மேற்கூரையை கிழித்தெறிந்தது.இரண்டாவது குண்டு கீழே தரையில் வெடித்து.இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பெரும் சத்தம் எழுப்பும் அளவிற்கு,இந்த குண்டுவெடிப்பின் தாக்கம் இருந்ததாகவும், எனினும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக,2016 ஆம் ஆண்டு பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு முதல் ஆறு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் மூன்று பாதுகாப்பு படை வீரர்களும் உயிர் இழந்தனர்.அந்த வகையில் மீண்டும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியாக இந்த குண்டு வெடிப்பு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து,குண்டுவெடிப்பின் தன்மையைக் கண்டறிய ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரின் உயர் அதிகாரிகள்,காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மேலும்,இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி,ஆரம்ப ஆய்வில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன்கள் மூலமாக இந்த வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டன என்றும்,அவை மூலம் சரியான இடம் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும்,
அதுமட்டுமல்லாமல்,விமான நிலையத்திற்கு அருகே உள்ள பகுதியில் ஒரு ஹார்ட்கோர் எல்.ஈ.டி பயங்கரவாதி உட்பட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 4.7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் சாதனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…