உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கொண்டே இருக்கின்றனர். இந்நிலை ஒரு புறம் இருக்க சில மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால், அத்தியாவசிய தேவை உபகரணங்கள் இல்லாமல் மருத்துவமனை திணறி வருவதுடன் ஆக்சிஜன் இல்லாமல் முழு நாடும் தவித்து வருகிறது. அதனால் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் உயிரிழக்க கூடிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். லக்னோவில் உள்ள எம்எல்ஏ சுரேஷ் குமார் என்பவரும் எம்எல்ஏ ரமேஷ் சந்திரன் என்பவர்களும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,இவர்கள் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இவர்களது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…