பாஜகவிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பாஜக பிரமுகர்கள்..!
இமாச்சல பிரதேசத்தின் பாஜக பட்டியல் இன அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த ஹர்மெல் திமான், தனது கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் இருவருடன் இணைந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதார அமைச்சருமாகிய சத்யேந்தர் ஜெயின் அவர்கள், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பல பாஜக தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் விரைவில் சேர்வார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் கொள்கையால் சோர்வடைந்து தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.