அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக இருப்பதாகவும், கிறிஸ்தவர்களுக்கு என்றால் அமைதியாக இருப்பாரா என்று கூறினார்.மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இவர் மீது இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே அர்னாப் கோஸ்வாமி, மற்றும் அவரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் இது குறித்து அர்னாப் வெளியிட்ட வீடியோவில், சோனியா காந்தி நாட்டின் மிகப்பெரிய கோழை. என்னை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லை .எனக்கு ஏதாவது நடந்தால், சோனியா காந்தி பொறுப்பாவார் என்று தெரிவித்தார்.பின் அர்னாப் மும்பை போலீசில் புகார் அளித்த நிலையில் இது குறித்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது மும்பை நீதிமன்றம்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…