பெண்ணை உளவு பார்த்த இருவர் கைது.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

Default Image

புனேவில் பெண்ணை உளவு பார்த்த இரண்டு தனியார் துப்பறிவாளர்களை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா : புனேவில் உள்ள கோரேகான் பூங்காவில் சுகாதார ஆலோசகரான பணிபுரியும் பெண்ணின் நடவடிக்கைகளை இரண்டு தனியார் துப்பறிவாளர் கண்காணித்து வந்துள்ளனர். அவர்கள் கண்காணிப்பதை அறிந்த அந்த பெண் புனே நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில் இருவரும் தன்னை பின்தொடர்வதாகவும் தனது புகைப்படங்களை எடுத்து அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டினார்.

புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் நாராயண் ஷிர்கோன்கர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து சந்தேகத்திற்குரிய அந்த இரண்டு நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட வாட்கானைச் சேர்ந்த நிலேஷ் லக்ஷ்மன்சிங் பர்தேஷி என்பவரும், தேஹுவைச் சேர்ந்த ராகுல் கணபத்ராவ் பிரதார் இருவரும் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்தது.

மேலும் அந்த பெண்ணை பின்தொடர சொல்லியவரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அவரது ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை அந்த பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு நாளைக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 டி (பின்தொடர்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்