ரூ.500 கொள்ளையடித்த ஒருவரை கொலை செய்ததற்காக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை அருகே உள்ள வெர்சோவா கிராமத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் 25 வயது மதிப்புத்தக்க ஒரு இளைஞர் ரத்த வெள்ளத்தில் குளத்தில் கிடந்ததை போலீசார் பார்த்தனர். அந்த இளைஞரின் கழுத்து வெட்டப்பட்டு மார்பு மற்றும் வயிற்றில் படு காயங்கள் இருந்தன.
அவரது கையில் பச்சை குத்தியதன் அடிப்படையில், உடலை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். பலியான இளைஞர் விக்ரம் நிஷாத் என்பது அருகிலுள்ள உள்ள ஒரு கிராமத்தை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் வாங்குவதற்காக ஒருவரிடமிருந்து ரூ.500 திருடியுள்ளார்.
பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்களுடன் உயிரிழந்த இளைஞர் சண்டையிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சந்தீப் ராய், (25) மற்றும் கன்ஷ்யம் தாஸ் (50) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், வெர்சோவா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிராஜ் இனாம்தார் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் வயிற்றிலும் முதுகிலும் பத்து தடவைகளுக்கு மேல் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் என தெரிவித்தார்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…