உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துள்ளனர்.
நொய்டாவில் பிஸ்ரக் பகுதியில் நேற்று இரவு காவலர்கள் வாகன சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
திடீரென காரில் உள்ள நபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரில் இருந்த இருவருக்கு காலில் குண்டடி பட்டது. உடனே போலீசார் அந்த காரை தடுத்து மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்த இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாவட்டத்தின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஆங்குர் அகர்வால், காரிலிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துவிட்டோம். இந்நிலையில், காரிலிருந்து ஒருவர் தப்பி சென்றுவிட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதில் கைதான இவர்களின் பெயர் சிராஜ், ராமு. இவர்களிடம் உரிமம் இல்லாத 2 துப்பாக்கியும் சில தோட்டாக்களும் இருந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…