வாசனை திரவிய விளம்பரத்தை கைவிடுமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை ஐ&பி அமைச்சகம் உத்தரவு.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, வாசனை திரவிய பிராண்டின் விளம்பரத்தை உடனடியாக நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாசனை திரவிய விளம்பரம் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, வாசனை திரவிய பிராண்டின் விளம்பரம், கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தின் நலன்களுக்காக பெண்களின் சித்தரிப்புக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் கோட்பாடு) மீறுவதாக இருக்கும் என கூறியுள்ளது.
வாசனை திரவிய பிராண்டின் வீடியோக்கள் சமூக ஊடக பயனர்களின் பெரும் பகுதியினரிடையே சீற்றத்தைத் தூண்டியது. இது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்க முயல்வதாக உள்ளது. டியோடரண்ட் பற்றிய தகாத மற்றும் இழிவான விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி வருவது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, இந்த விளம்பரத்தின் அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப்பை நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்திய விளம்பர தர நிர்ணயக் கவுன்சிலும் (ASCI) வீடியோக்கள் அதன் வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கண்டறிந்துள்ளதாகவும், விளம்பரத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு விளம்பரதாரரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, (Layer’r Shot) டியோடரண்ட் விளம்பரம் (Deodorant advertisement) நாட்டில் கற்பழிப்பு மனநிலையை அப்பட்டமாக ஊக்குவிக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனைத்து தளங்களில் இருந்து விளம்பரம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என டெல்லி பெண்கள் ஆணையம் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…