ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #ZomatoUninstalled ,#BoycottUberEats!
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் உள்ள நிறுவனம் சோமாட்டோ .இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர் சோமாட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.
உணவை டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை கேன்சல் செய்து உள்ளார்.அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் ” நான் உணவு கொடுப்பவரை மாற்ற வேண்டும் என கூறினேன் .ஆனால் அவர்கள் அவரை மாற்ற வில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ZomatoUninstalled ,#BoycottUberEats என்ற ஹேஷ்டேக்கள் இந்தியா அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்களை பயன்படுத்தி அந்த வாடிக்கையாளருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் உபேர் ஈட்ஸ் மற்றும் சோமாட்டோவை அன் இன்ஸ்டால் செய்த ஸ்கிரீன் ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Such a biased librandu #ZomatoExposed Im deleting the app #ZomatoUninstalled @ZomatoIN @Zomato and Im supporting @NaMo_SARKAAR pic.twitter.com/PZJ2GC56gX
— Mohit Verma (@MohitPlusPro) August 1, 2019
I uninstalled #ZomatoUninstalled because they don’t have respect on customer, #boycottzomato @ZomatoIN @Zomato @zomatocare pic.twitter.com/SqFWsDr2uQ
— Kaushik Dafda (@kaushik_dafda) August 1, 2019
#ZomatoUninstalled
Yes I did pic.twitter.com/aJmo7IFEOu— SHIVAM TRIPATHI ???????? (@gOOd__to__c__U) August 1, 2019