இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

Default Image

சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய செயலுக்கு பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை இதற்கு முன்னரும் தவறாக காண்பித்து மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக் பகுதியை சீனாவின் பகுதியாக காண்பித்திருந்தது.

இதனால் ட்விட்டர் நிறுவனத்துடன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக நோட்டிஸ் அனுப்பியதை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனம் தவறை திருத்திக்கொண்டதால் அந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தற்போது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியை ட்விட்டர் மேப்பில் டீவீப் லைப் என்ற பக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் தனி நாடாக காட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ட்விட்டரின் இந்த செயலுக்கு பலரும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்